பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 20 இந்தியை எதிர்க்க ஆங்கில ஆதரவாளர்கள் கேடயமாகப் பயன்பட்டனர் என்பது உண்மை. அதற்காக 'வாளைத் (தமிழ்) துர எறியுங்கள்; கேடயத்தையே போருக்குப் பயன்படுத்துங்கள். என்பது அறிவுக்குப் பொருந்துமா? இந்தியை எதிர்ப்பதில் முனைந்து நின்ற காரணத்திற்காக இவர்கள் சொல்வது நியாயமாகிவிடுமா? தனியே வழிப் பயணம் செல்லும் பெண்ணிடம், தகாத முறையில் ஒருவன் நடக்க முயல்வதைத் தடுத்து நிறுத்திய இன்னொருவன், சிறிது தூரம் சென்றதும் "தாலி கட்ட நாள் பார்க்கலாமா?' என்றால், அவனுக்கு இவனுக்கும் என்ன வேறுபாடு? இந்திக்கு இடம் இல்லையேல் அந்த இடம் ஆங்கிலத்திற்கு என்று வாதாடுவது எந்த வகையில் நியாயம்? தமிழ் பயிற்றுமொழி ஆவதால் ஆங்கிலத்தின் தரம் குறைந்துவிடும் என்கின்றனர். 1948-ஆம் ஆண்டில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் வந்தபோது சனாதனிகள், "ஐயோ தேவதாசி முறை ஒழிந்தால் கலைகள் நசிந்து போகுமே!’ என்று கலையின் பெயரால் கண்ணிர் விட்டனர். ஒரு சீர்திருத்தம் என்றால் அதற்கு எதிர்ப்பு வராது இருக்காது போலிருக்கிறது? எவ்வளவுதான் நம் சொன்னாலும், ஆங்கில ஏடுகளில் நாளும் ஆசிரியருக்குக் கடிதம்' என்னும் பெயரில் தமிழ்ப் பயிற்றுமொழி எதிர்ப்பு இயக்கம் நடைபெறுகிறது. தமிழ்ப் பயிற்றுமொழியை ஆதரிப்போர் கடிதம் ஒன்றோ, இரண்டோ வரும்; அவ்வளவுதான். தமிழகத்தின் தலைநகரிலிருந்து 'சொல்லுந்திறமை தமிழ் மொழிக்கில்லை' என்ற பொய்ச் செய்தி அந்த ஏடுகளால் உலக மெங்கும் பரப்பப்படுகிறது. தஞ்சையிலிருந்து ஒர் அன்பர் 27-12-70 இந்து இதழில் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அவர், தமிழின் பழமையை ஒப்புக்கொள் கிறாராம். சொல்லப்போனால், பழமையானதாய் இருப்பதாலேயே அறிவியலுக்குப் பயன்படுமா என்று ஐயப்படுகிறாராம். எப்படியிருக்கிறது பார்த்தீர்களா? தாய் வயதாகி விட்டால் 'இனி நீ வேண்டாம், போ' என்று புறக்கணிப்பது மனிதப் பண்பாம். டாக்டர் மு.வ. சொல்வதுபோல் 'திருமணம் ஆகும் வரையில் தாயிடம் அன்பு செலுத்துகிறார்கள். மனைவியின் பாசம் வளர்ந்த பிறகு, அது சிறிது சிறிதாகக் குறைந்து நாளடைவில் இல்லாமல் போவதும் உண்டு" (மொழிப் பற்று) தமிழ் என்னும் தெய்வத் தாயின்