பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் & 23 ஒரு சிலர் மாற்றம் என்றால் புதிய சீர்திருத்தம் என்றால், சீற்றம் கொள்கிறார்கள். காரணம், இன்று படித்தவர்களிடையே ராஜாஜி போன்ற அறிஞர்கள் இதுபற்றி அச்சம் தெரிவிக்கின்றார்களே என்பதுதான். சிறந்த வழக்குரைஞர் வாதிக்காகவும் வாதாட முடியும், பிரதிவாதிக்காகவும் வாதாட முடியும் என்றால் அது அவரது திறமையைக் காட்டலாம்; நேர்மையைக் காட்டாது. இதே ராஜாஜி அவர்கள் தமிழ் பயிற்றுமொழி ஆகவேண்டும் என்பதற்காகத் தெளிவான வழிகளைச் சொல்லியிருக்கிறார். நாம் இப்படிச் சுட்டிக்காட்டும் போது 'அப்போது சொல்லியிருக்கலாம்; இந்தியை ஒரு காலத்தில் புகுத்தினார்; பின்னர் அவரே எதிர்க்க வில்லையா? என்று கேட்பார். ஆனால் அதற்குக் காரணம் இருந்தது. இந்தி அந்த மொழியறியா மக்கள் மீது புகுத்தப்பட்டது. தமிழோ தமிழ் அறிந்த மாணவர்க்கே பாடமொழி ஆகிறது. [...] ராஜாஜி அன்று கூறிய கருத்தை மாற்றியது ஏன்? இன்று ராஜாஜி தம் கருத்தை மாற்றிக் கொண்டதற்குத் தக்க காரணம் இருப்பதாகத் தோன்றவில்லை. 'தமிழ் உள்ளபடியே புகுத்தப்படும் முன் அப்படிச் சொன்னேன்; நடைமுறைத் தொல்லையை உணராமல் அப்படி எழுதினேன்; பின்னர் கருத்தை மாற்றிக் கொண்டேன்' என்று அவர் சொல்ல (Քւգ աո51. ஏனெனில், தமிழ் பயிற்றுமொழியாக முதன் முதலாகக் கோவைக் கல்லூரியில் செயல்படுத்தப்பட்ட ஆண்டு, 1960, 1961-இல் பிற கல்லூரிகட்கு அது விரிவுபடுத்தப்பட்டது. இராஜாஜி தம் கருத்தை நூல் வடிவில் வெளியிட்டதோ 1962 இல் 'ஆங்கில மொழி பற்றிய சிக்கல்' என்ற அந்த நூலில்தான் - ஆங்கிலத்தின் இன்றியமையாமை - பற்றிய அந்த நூலில்தான் தமிழ், பயிற்று