பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 51 வேனிற் காலத்தில் வெயிலின் கொடுமையால் பாலையாகத் ஒரிந்தனவாதலில் பாலை எனத் தனியாக ஒரு நிலத்தை அவர் கூறவில்லை." பிற்காலத்தார் பாலையையும் தனிநிலமாகக் கொண்டு நிலங்கள் ஐந்து என்றனர். உலகில் எந்தப் பகுதியையும் இவ்வகைப் பாகுபாட்டில் அடக்கிக் கூறலாம். இப்பாகுபாடு பெரும் பான்மையும் தனித்தனிப் பாக்களின் தொகுதிகளாக விளங்கும் சங்க இலக்கியங்களுக்கே பொருந்தும். ஆனால் சிலம்பு என்னும் பெருங் காப்பியத்திலும் இது பொருந்தியிருக்கக் காண்கிறோம். தமிழர் குருதியோடு ஊறித் தோய்ந்த இப்பாகுபாடு அடிகள் மனத்தையும் விட்டகலவில்லை. குன்றக்குரவை ஆய்ச்சியர் குரவை, கானல் வரி, வேட்டுவவரி போன்ற பகுதிகளில் ஒவ்வொரு நிலத்தையும் தனித்தனியாக நிறுத்திப் பாடியுள்ளார். எனினும் சில ஆற்றுப் படைகள் எல்லா நிலங்களையும் ஒருங்கே காட்டுதல்போல் அடிகள் தம் காவியத்துள்ளும் காட்ட நினைத்தார் போலும் டாக்டர். மு.வ.கூறுவதுபோல "நானிலங்களையும் பாடுதற்கு என்று தனியான ஒரு படலம் வகுத்துக்கொள்ளாமல் வஞ்சிக் காண்டத்தில் நீர்ப்படைக்காதையில் ஓர் இடத்தை அமைத்துக்கொண்டார். இக் காதையில் நானிலத்தைப் பற்றிக் கூறும் பகுதி கலைச் சுவையோடு அமைந்துள்ளது. நானிலங்களை அவற்றின் விளை பொருள் களையும் அவற்றின் பறவை விலங்குகளையும் ஒரு பெரிய பட்டிபோல் விளக்கித் தருவது கலைத்திறன் ஆகாது. அடிகள் அவ்வாறு விளக்கவுரைகள் கூறவில்லை. நான்கு நிலத்து மக்களும் பாடும் பாடல்கள் சேர நாட்டுத் தலைநகரத்தில் கேட்பதாகக் கூறுகிறார். வடநாட்டிற்குச் சென்று வென்று திரும்பிய செங்குட்டுவன் வரும் வரையில் துயருற்றிருந்த கோப்பெருந் தேவிக்கு ஆறுதலாகச் செய்தி வந்து சேர்கிறது. அங்கே நாட்டு மக்களெல்லாம் அவனுடைய வருகையைப் போற்றித் தம் தம் நிலத்துக்கும் தொழிலுக்கும் ஏற்ற பாடல்களைப் பாடுகின்றார்கள். அந்தப் பாட்டுக்களின் ஒலி கோப்பெருந்தேவியின் செவியில் கேட்கிறது. தினைப்புனத்தில் பரண் மேல் இருந்து குறமகள் பாடும் குறிஞ்சிப் பாட்டு, முல்லை நிலத்தில் பசுக்களை நீர்த்துறையில் பிரித்த கோவலர் குழல் ஊதிப் பாடும் பாட்டு, மருத நிலத்தில் f 'முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல் பிழந்து நடுங்கு துயருறுத்துப் பாலை. என்பதோர் படிவங் கொள்ளும்' என இளங்கோவடிகள் நானிலத்தையே குறிப்பிட்டார். அந்நானிலத் தையே நீர்ப்படைக் காதையுள் காட்டுகிறார்.