பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 58 வயது முற்றிய பின்னுறு காதலே மாசுடைத்து, தெய்வீக மன்றுகாண் என்று பாடுவதன் மூலம் வயது முற்றிய பின்னுறு காதலைவிட 'பிள்ளைக்காதலே' மாசற்றது மட்டுமல்ல, தெய்வீகமானது என்பதைச் சொல்ல வேண்டுமென்பதற்காக வயது வந்தோர்காத,ை மட்டந்தட்டுகிறான். அவன் அப்படிக் கருதுவதிலும் சரியான நியாயங்கள் உள்ளன. வயது வந்தோர் காதலில் சில சமயம், சாதி, பணம், குடும்ப கெளரவம் குறுக்கிட்டுவிடும் வாய்ப்பு உள்ளது. உண்மைக் காதலர் அப்படியிருக்கமாட்டார்கள் என்று கூறலாம். நடைமுறை வாழ்க்கையில் காதலித்து மணம் புரிந்துகொள்ள முனைகிற மணமகன்கூட வரதட்சணை கேட்பதும், மனம் புரிந்துகொண்ட பின் பிணக்குகள் ஏற்படுவதும் நிகழ்ந்துள்ளது. அதனால்தான் சாதி, பணம் போன்ற மாசுகளை நீக்கிய மாகத் கட்டுப்பாடு உள்ள காதல் பிள்ளைக்காதல் என்று பாரதி மறைமுகமாக மக்களுக்கு உணர்த்துகிறான். தேசபக்திக் கவிதையில் கூடகாதலை ஊடாடச் செய்கிற பாரதிக்கு காதல் கவிதையில் தேசபக்தரைப் போற்ற மனம் விழைகிறது. தேச பக்தர் வரவினைக் காத்தல் போல் காத்திருந்தவள்போம் வழி முற்றிலும் கண்கள் பின்னழ கார்ந்து களித்திட குளத்தில் நீரெடுத்து வரச் சென்ற அவள் திரும்பி வருவதற்காகத் தேசபக்தர் வரவினுக்குக் காத்திருப்பார் போலக் காத்திருக்கிறாராம். இந்தக் காதல் பக்தன் அவள் பின்னே கண்களைச் செல்லவிட்டு, கோத்த சிந்தையோ டேகி யதில்மகிழ் கொண்ட நாட்கள் பலகழித் திட்டனன், பூத்த ஜோதி வதனந்திரும்புமேற் புலனழிந்தொரு புத்துயிரெய்துவேன் அவள் திரும்பிப் பார்த்தால், புத்துயிர் பெறுவேன் என்று புலம்புகிறான். காதல் வசப்பட்ட கவிஞன் இறுதியில் இவன் பால் அவள் நெஞ்சில் காதல் அரும்பியதை இங்கிதம் பூண்டதாக இயம்புகிறான்.