பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் * 90 வாழ்க்கையை அப்பட்டமாகப் படம் பிடித்துப் பாட்டெழுதும் ஆற்றல் பட்டுக்கோட்டையிடம் வந்தது. சித்தர்களுக்கும் மேலாக எளிய முறையில் தத்துவக் கருத்து; களைக் தந்ததற்காக நாம் பட்டுக்கோட்டையைப் பாராட்டுவதை பாப்பையா போன்றவர்கள் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். நாம் வெறும் காக்கைகள். புள்ளைக் குத்தி புழுவைத் தின்னும் காக்கைகள். 'எருதின் நோய் காக்கைக்குத் தெரியுமா? இது பழமொழி. பட்டுக்கோட்டை வாழ்க்கையில் பட்ட அல்லல், அவதி என்ற ரணத்தில் இருந்து ஒழுகிய இரத்தத்தால் எழுதப்பட்ட வரிகள்தாம் தத்துவப்பாடல் வரிகள். இது பாப்பையாவின் மதிப்பீடு. அப்படியானால், நம்மைச் செயல்புரியத் தூண்டும் கவிதைகளைத் தந்த அவர் சிந்தனையில் செயலூக்கமிக்கவர் (Optimist) எனினும் தன்னைப் பொறுத்தமட்டில் ஒரு அழுகுணிச் சித்தர் (Pessimist) தானா? பாப்பையாவின் பார்வை "ஆம்" என்கிறது. இளங்கோவடிகள் கூட இதற்கு விதிவிலக்கல்ல என்கிறார். 'கூட்டிலே குஞ்சு பறக்க நினைத்தால் குருவியின் சொந்தம் தீருமடா.... என்ற தத்துவப் பாடல் வரி தந்த பாதையில் கண்ணதாசனின் கவிதை 'வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ?: பயணம் செய்ததைக் குறிப்பிட்டே ஆகவேண்டும் 'தத்தக்கா புத்தக்கா நாலு காலு தானே நடக்கையிலே ரெண்டு காலு உச்சி வெளுத்தா மூணுகாலு ஊருக்குப் போகையிலே பத்துகாலு எட்டுக்கால் கீழாக இரண்டு கால் மேலாகக் கொட்டு முழக்கோடு கும்பலுக்கு மத்தியிலே'