பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜெயகாந்தனின் ஒரு குறுநாவல் ‘'எனது கதைகளில் பல இக்காலச் சமூகப் பெண்களின், படித்த பெண்களின், வாழ்க்கையில் நேர்ந்து விடுகிற அவலங்களையும் அவற்றை எதிர்த்து அவர்கள் எவ்வாறு போராடுகிறார்கள் என்பதையும் சித்தரிப்பனவாகவே – அமைந்திருக்கின்றன: (முன்னுரை-இதயராணிகளும் இஸ்பேடு ராஜாக்களும்) என்று ஜெயகாந்தனே குறிப்பிட்டுள்ளபடி, அவரது கதைகளில் பெண்ணியம் சம்பந்தப்படாத கதை எதுவுமே இல்லை எனலாம். ஜெயகாந்தனின் பார்வைப்படி, பெண்ணியம் ஆண்களை வெற்றி கொள்வதன்று; வாழ்க்கையை வெற்றி கொள்வதே. அதனால்தான் அவர் படைத்துள்ள பெண்கள் பலரும் வழக்கத்திற்கு மாறாக' இருக்கிறார்கள். வழக்கத்திற்கு மாறான இவர்களிலும் மாறாக வித்தியாசமாகப் படைக்கப்பட்டிருக்கும் ஒரு பெண்தான் அகிலா. 'இதய ராணிகளும் 'இஸ்பேடு ராஜாக்களும் என்னும் நூலில் உள்ள இரண்டாவது குறுநாவலில்தான் அகிலா என்றொரு அதிசயத்தைப் பார்க்கிறோம். 'ஒரு குடும்பத்தில் நடக்கிறது’ என்னும் நாவலின் தலைப்பைப் போலவே அதில் வரும் சம்பவங்கள், காட்சிகள் எல்லாம் ஒவ்வொரு குடும்பத்திலும் நிகழக் கூடியனதாம். அப்பா, அம்மா, அண்ணன், மாமியார், கணவன் இவர்கள் எல்லாரையும் கூட ஒவ்வொரு குடும்பத்திலும் சந்திக்கக் கூடும். ஆனால் அந்த அகிலா என்றொரு அதிசயத்தை..... []