பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 83 அந்தக் குடும்பத்தின் மூத்தமகன் ஆறுமுகம் விமானப் படையில் பணியாற்றுகிறான். 'அடுத்த விடுமுறைக்கு வரும்போது ஆங்கைக்குத் திருமணம் செய்தாக வேண்டும் என்று அண்ணன் ஆறுமுகம் வற்புறுத்திச் சொல்ல, தங்கை அகிலாவுக்கு வேகமாகவே ,ாப்பிள்ளை பார்க்கிறார்கள் பெற்றோர்கள். பட்டதாரி ஆகி, ஆசிரியையாக வேலை பார்க்கும் அவளுக்கு பி.பி.ஏ. தேறாத, வேலையில்லாத சென்னையைச் சேர்ந்த பாலசுந்தரம் கணவன் ஆகிறான். ஐயாயிரம் ரூபாய், பத்துப் பவுன் நகை, அவளுடைய நிரந்தர வருவாய், அம்மாவின் வற்புறுத்தல் எல்லாம் சேர்ந்து தயக்கத்தோடிருந்த பாலசுந்தரத்தை அகிலாவின் வாழ்க்கைத் துணை ஆக்கிவிட்டன. அகிலாவுக்கு மட்டுமல்ல, அமிர்தத்துக்கும் அவன்தான் துணை என்பது போகப் போகத் தெரிகிறது. அவன் அம்மாவுக்கு தெரியாத அவன் அந்தரங்கம் அகிலாவுக்குப் புரிகிறது. ஏற்கெனவே ஒரு குடும்பம் இருக்கு என்று ஒருநாள் பாலசுந்தரம் சிகரெட் புகையாய் வெளிப்படுத்திவிடுகிறான்; அகிலாவோ கல்லாய் இறுகிப் போகிறாள். 'எல்லாவற்றையும் ஒளிவுமறைவில்லாமல் பாவ மன்னிப்புக்கு முறையிடுகிற ஒரு கிறிஸ்தவனைப்போல் அவன் சொன்ன செய்திகளைக் கேட்டு அகிலா குமுறும் எரிமலையாக மாறியிருக்க வேண்டும்; அகிலாவின் மாமியார் உண்மையறிந்து பாவி துரோகி என்று பழிப்பதைப்போல் குறைந்தபட்சம் வார்த்தைகளையாவது கொட்டிச் சீறியிருக்க வேண்டும். அவளோ, நிதானமும் அமைதியும் அடைகிறாள். பாலசுந்தரத்தின்மீது பரிதாபப்படுகிறாள். எல்லா வற்றிற்கும் மேலாக, தன் தாய் தந்தையிடமும் அண்ணனிடமும் கூடத் தனக்கு நேர்ந்த கொடுமையை மூடி மறைக்க முயல்கிறாள். மகிழ்ச்சியாக இருப்பதாகக் கடிதம் எழுதுகிறாள். திருமணம் முடிந்து மகளைப் பிரியும்போது பெற்றோர் வடிக்கும் கண்ணிருக்கு ஜெயகாந்தன் அழகாக விளக்கம் சொல்கிறார். "இது வரை நடந்த எல்லாவற்றையும் போல எதிர்கால வாழ்க்கையும் மகளுக்கு திருப்தியாகவும் சந்தோசமாகவும் அமையவேண்டும் என்கிற எதிர்பார்ப் பிலும் பிரார்த்தனையிலும் அவர்களது உணர்ச்சிகள் சிலிர்த்துப் போவதன் விளைவு அல்லாமல் இவர்களின் கண்ணிருக்கு வேறு அர்த்தமில்லை" (பக். 70-71) எத்தனை பெற்றோர் தங்கள் எதிர்பார்ப்புப்படி மகளின் எதிர்காலம் ஆனந்தமாய் அமையப் பார்க்க முடிகிறது? எத்தனை