பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நனவுகளில் வாழ்வோரை யெல்லாம் iணில் நான்மிகவும் கேவலமாய் நினைத்தேன்; காதற் கனவுகளில் காலமெல்லாம் சஞ்சரிக்கக் கற்பனைத்தேன் நதிமிதக்கப் பார்த்தேன்; ஆனால் கனவுகளில் பூகம்ப வருகை கண்டேன்! கடல்தின்ற கபாடபுர அழிவைக் கண்டேன்! கனவுகளே இனிவேண்டாம் வேண்டாம் என்றே கதறுகின்றேன்; கனவுகளோ கலைய வில்லை! கன்றைத்தான் இழந்திருக்கும் பசுவும் கூடக் கறக்கத்தான் செய்கிறதே! அதுபோல் பாவை சென்றேவிட் டால்என்ன என்றே நானும் சிரிக்கத்தான் முடிகிறதா? மலையின் உச்சி நின்றேபே ரெழிலமுதை உண்ணச் சென்றே நெடும்பள்ளம் வீழ்ந்ததவனின்நிலையைப் பெற்றேன்; இன்றே.இப் பொழுதேஎன் மனமே டைக்குள் இருள்கூத்து நடக்கட்டும்; சுகம்சா கட்டும்! போய்விட்டாள்; புரையோடிப் போயி ருக்கும் புண்ணுள்ளே தீ நுழைத்துப் புகையைப் போலப் போய்விட்டாள்; பார்வைக்குக் குளிர்ச்சி யூட்டிப் புனலாக உருகுபனிக் கட்டி போலப் போய்விட்டாள்; அணில் சுற்றித் தினமும் காக்கப் புனக் கிளியின் வாய்ப்பட்ட பழத்தைப் போல போய்விட்டாள்; இனியென்ன என்றன் நெஞ்சில் பூக்கட்டும் காளான்கள்; புதர்மண் டட்டும்! 1962. 'சுவை தொகுப்பிலிருந்து 101 0 மீரா கவிதைகள்