பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலைவனப் பயணம்! இதயத்தை இயக்கிக்கொண்டிருந்த அன்னம் எனைப்பிரிந்த காரணத்தால், ஏமாற் றத்தால் பதைபதைத்துப் பரிதவித்துப் பித்தன் ஆனேன்; பாய்மரமில் லாப்படகாய் ஆனேன், ஏனோ விதைபோட்டும் முளைதோன்றா நிலத்தைப் போல வீண் ஆனேன்; பாழ் ஆனேன்; வெறுமை ஆனேன்! எதைச்சொல்வேன்? எங்கேபோய்ச்சுமையை வைப்பேன்? என்சோகம் என் கண்ணிர் எனக்கே சொந்தம்! நெல்லிக்காய் தின்றவுடன் குளிர்ந்தி ருக்கும் நீர் அருந்திச் சுவைப்பதைப்போல் சிவந்தி ருக்கும் அல்லிப்பூ இதழ்ப்பெண்ணை மாலை நோக்கி ஆகாயக் கனவுகளில் இரவைப் போக்கிச் செல்லத்தான் விட்டேன்என் பறவை நெஞ்சை; சிறகொடிந்து போயிற்றே ஆசை யாவும் பல்லிக்குப் பலியாகும் பூச்சி யாகும் பாலைவனப் பயணம்தான் இனிமேல் வாழ்க்கை கவிதைகள் 0 100