பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்குக் கிடைத்திருக்கும் தலைவன் ஏனோ ஓயாமல் தேய்கின்றான்; பாவம் ஆனால் எங்களுக்குக் கிடைத்திருக்கும் தலைவர் மட்டும் எப்போதும் வளர்கின்றார் என்று நாங்கள் கங்குலிலே முகங்காட்டும் மீன் இனத்தைக் கண்டுநகை புரிந்ததனால் வெகுண்டாய் போலும்! திங்களுக்குப் பெருமைதர நினைத்தாய் போலும்! திட்டமிட்டு நல்லுயிரைப் பறித்து விட்டாய்! பட்டமரம் வெட்டுண்டால் பரவாயில்லை; பாதத்தில் தைக்கின்ற முள்வ ளர்க்கும் நெட்டைமரம் வீழ்ந்திட்டால் கவலை யில்லை; நிழல்நாடி நிற்போர்க்கு மயக்கம் நல்கும் கெட்டமரம் - நச்சுமரம் நிலத்தில் வெட்டிக் கிடந்திட்டால் வருத்தமில்லை; ஆனால் உன்கை தொட்டமரம் வாழைமரம் - கணிப ழுத்துத் தொங்கிக்கொண்டிருந்தமரம் வீழ்த்த லாமா? மண்ணாசை உடையவர்மேல் - பொறுமை என்னும் மண்ணாசை உடையவர்மேல் ஆசை வைத்தாய்; பெண்ணாசை உடையவர்மேல் - கல்வி என்னும் பெண்ணாசை உடையவர்மேல் ஆசை வைத்தாய்; பொன்னாசை உடையவர்மேல் தூய்மை என்னும் பொன்னாசை உடையவர் மேல் ஆசை வைத்தாய்; உன்னாசை பேராசை எங்கள் வாழ்வின் ஒராசை யைப்பறித்தாய் கொடுமை, ஐயோ! 117 ) மீரா கவிதைகள்