பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சே நில்! நில்! திசை மாறிப் போகாதே! நெஞ்சே, நில்! நில்! தெளிவின்றிக் குழம்பாதே! என்றும் எங்கும் அசைபோட்டுத் திரிகின்ற கோயிற் காளை ஆகாதே; கட்டின்றி அலைந்தி டாதே! தசைகுருதி நரம்புகளின் பொல்லா இச்சைத் தாக்குதலைத் தாக்காமல் தகர்ந்து போக இசையாதே நெருப்பழகுக் கிரையாகாதே! இலையிழந்த மரத்தோற்றம் எடுத்தி டாதே! வானைப்போய்க் கிழிக்கின்ற மூங்கில் போல வளர்வதற்குத் துடித்திட்ட நீயே, இன்று கூனிப்போய்த் - தண்டுமிலாக் கீரை போலக் குறுகிப்போய் விடலாமா? பசியெடுத்த பூனைபோல் பார்க்காதே கண்ட கண்ட பூவைப்போய்ப் புணர்கின்ற வண்டா காதே! தேனைப்போல் இனிக்கிறதே என்றி ழிந்த தேகசுகம் தேடாதே சிதைந்தி டாதே! 155 0 மீராகவிதைகள்