பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழுஎன்று பேராசை சொன்னால், நம்பி வீழாதே பள்ளத்தில் வயல் வாழ் நாங்கூழ்ப் புழுபோல வாழாமல் ஊண்கெடுக்கும் புழுவாக மாறாதே! இலக்க ணத்தில் வழுஎன்றால் கூடஅதற்(கு) அமைதி உண்டு; வழுஉனக்கு வருமாயின் அமைதி இல்லை! கழுத்தளவு தண்ணீரில் மூழ்கிப் பின்னர் கதறாதே! பதறாதே! நெஞ்சே, நில் நில்! கற்பனைக்கும் கனவுக்கும் காகி தப்பூக் காட்சிக்கும் கவர்ச்சிக்கும் மொத்த மாக விற்பனைக்குக் கொடுக்காதே உன்னை, நெஞ்சே! விழலுக்கு நீர் பாய்ச்ச விரைந்தி டாதே! "அற்புதம் ஆ! உன் ஆக்கம் இமயம்' என்றே அருகிருந்து பத்துப்பேர் கூடிச் சிந்தும் சொற்புகழ்ச்சி மழையினிலே நனைந்து வெற்றுச் சுகங்கான ஏங்காதே! ஏமாறாதே! அருளுக்கும் அன்புக்கும் புத்தன் சொன்ன அறத்துக்கும் வரவேற்பை அளித்தி டாமல் பொருளுக்கும் பொன்னுக்கும் போகத் துக்கும் பொய்ப்பாடல் புனையாதே! நான் நான் என்னும் இருளுக்குள் நுழையாதே! வெறிபி டித்தே இருட்டறையில் சிற்றின்பம் தேடித் துய்க்க நெருங்காதே! சில்லென்று பூத்தி ருக்கும் நெருஞ்சியிலே நடக்காதே நில்! நில்! நெஞ்சே! 'தமிழ்நாடு' 翼总6念 மீரா கவிதைகள் 다. 56