பக்கம்:முகவரிகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈருடல் ஈருயிர் இணையும்போது ஈருடல் - ஒருயிர் என்றாகிறது...

அதாவது ஈருயிர் இரண்டறக் கலந்து ஒரே உயிராகும் பிரயத்தனம்தான் காதல் என்ற அர்த்தமாகிறது.

எப்படிச் சொன்னாலும் - ஜீவாத்மா பரமாத்மாவோடு கலக்கத்துடிதுடிக்கிறது என்று சொன்னாலும் கூட-ஈருயிர் தான் ஒருயிராகிறது என்று உணர்த்தப்படுகிறது.

சிற்பி இங்கே வித்தியாசப்படுகிறார்.

காதலர் இருவருக்கும் இருப்பது ஒரே உயிர்தானாம். உயிரின் ஒரு பகுதி அவன்... மற்றொரு உன்னதமான பகுதி (better half) அவள்... ஒரு பகுதி மற்றொரு பகுதியைத் தேடி அடையத் துடிப்பதுதான் பரிசுத்தமான காதல் என்கிறார்.

   'தன் மற்றொரு பகுதியைத்
    தேடித் திகைக்கும்
    உயிரின் தவிப்பு...'

காதல் ஆகப் பழையதுதான்.... ஆனால் சிற்பியின் உளி பட்டு அது எத்தனை மாயச் சிற்பமாய் ஒளிவீசுகிறது.

கிரேக்கக் கவிஞன் ஹெலாய்டு (Hesoid) சொன்னான்! 'முதலில் பாழ்வெளி (Chaos) படைக்கப்பட்டது...... அடுத்து பூலோகம் படைக்கப்பட்டது. அதற்குப் பிறகு காதல் படைக்கப்பட்டது' என்று!

பூலோகத்தில் சொர்க்கத்தைப் பார்க்க வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள்.

அவர்கள் எல்லாம் வேகமாக, அதிகமாக, ஆழமாகக் காதலிக்க வேண்டும்!

104

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/105&oldid=970661" இலிருந்து மீள்விக்கப்பட்டது