கைது செய்வதற்கான உத்தரவு எதுவும் இன்றி, இயக்கத்தினரைக் 'கடத்தி'க் கொண்டு போவதற்குக் காவல்துறை செய்யும் அத்துமீறிய பிரயத்தனம், சின்னச்சாமியை அவ்வாறு 'கடத்திப் போய்விட்டு'க் கடைசியில், 'சின்னச்சாமியைப் பார்க்கவே இல்லை' என்று சத்தியம் செய்யும் சாகசம் கதையில் ஒர் அசாதாரண மான இறுக்கத்துடன் பதிவாகியிருக்கிறது! எடுத்துக் கொண்ட கருவுக்கு ஏற்பக் குறைந்த எண்ணிக்கையிலான பாத்திரங்கள், கதைப் பின்னல், காட்சிச் சித்திரிப்புக்கள் அனைத்தும் ஒரு புள்ளியில் இயங்கி உருவத்திலும் சிறப்புற அமைகிறது'கதை. நள்ளிரவில் கதவை இடிக்கும் சப்தம் கேட்டுச் சின்னச்சாமியின் தாயார் கதவைத் திறக்கிறாள்; வாசலில் நிற்கிறார்கள் போலீஸ்காரர்கள். “அவள் கதவைத் திறந்தபோது - காக்கி உடையில் அரசாங்கம்' என்று எழுதுகிறார் இன்குலாப். போலீஸை வெறும் போலீஸாக மட்டுமே இப்போதும் பாமரத்தனமாக நினைப்போரை நெஞ்சில் குத்தும் எழுத்து! இறுதிவரை நெஞ்சுரத்தோடு போலீசுக்காரர்களோடு போராடும் சின்னச்சாமியின் பாத்திரப்படைப்பு உணர்ச்சிமிக்கது! தன்னைக் கடத்திப் போக அத்துமீறி முயற்சி செய்யும் காவல்துறையினருடன் சின்னச்சாமி நடத்தும் உரையாடல் அற்புதமானவை.
1இன்குலாப் மட்டுமல்ல, சமூகப் பிரக்ஞையுள்ள இனம் படைப் பாளிகள் தங்கள் எழுத்தில் காவல் துறையின் வன்கொடுமையை அம்பலப்படுத்தத் தவறமாட்டார்கள் என்பதற்கு உதாரணமாக அண்மையில் வெளிவந்த ஜெயமோகனின் ரப்பர்நாவலில் எபன் என்னும் போர்க்குணம் மிக்க இளைஞனுக்கு நேர்ந்த அவல முடிவைக் குறிப்பிடலாம். 'போலீஸ் வண்டியில் தூக்கிவீசப்பட்ட எபன் பிறகு வீடு திரும்பவில்லை. தாங்கள் அவளைக் கைது செய்யவேயில்லை ான்று போலீஸ் கூறிவிட்டது.'
122