பக்கம்:முகவரிகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாங்கள் எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் பிழைப்பு நடத்த வேண்டும். அதற்கு இயக்கம் தொடங்க வேண்டும். எனவே இளைஞர்களை சேர்க்க வேண்டும்! இளம் வயதில், ரத்தம் எளிதில் சூடாகிற வயதில் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய பேச்சுகள் எளிதில் கவர்ந்திழுக்கும் என்று தெரிந்து அதற்கான செய்திகளைப் பரப்புவார்கள். அதில் தலையாயது, அடுத்த மதத்துக்காரன் தன் மதத்துப் பெண்ணைப் பலாத்காரம் செய்துவிட்டான் என்பது; அது நரம்புகள் ஒன்று சேர்கிற இடத்தில் தட்டுவது போல உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழச் செய்யக்கூடியது.

அத்தகைய ஒரு சம்பவம் தான் வேலாயியை, யாரோ பாம்படத்திற்கும் உடல் சுகத்துக்கும் ஆசைப்பட்டுக் கொலை செய்ய, அதை இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவன் செய்தான் என்று இந்து இளைஞர்களைத் திரட்ட கோபால் முனைந்தது. பி.ஏ. பட்டம் பெற்ற படித்த இளைஞர்கள் எப்படி வழிநடத்தப்படுகிறார்கள் என்பதற்கு உதாரணம். ஒரு முஸ்லீம்தான் வேலாயியை கற்பழித்துக் கொலை செய்ததாக அப்படி ஒரு சந்தேகத்தை மட்டனேந்தல் கிராமத்திலே நாங்களும் பரப்பிவிட்டிருக்கோம்' என்று கோபால் சொல்கிறபோது அந்த இயக்கத்தின் தலைவர் பொய்ப்பிரச்சாரம் செய்யலாமா? என்று தடுக்கவில்லை. மாறாக "இந்த டெம்போவை வளர்க்கணும்' என்று எரிகிற தீயில் எண்ணெய் வார்க்கிறார்.

இந்தப்பக்கம் உள்ளூரில் கோபால், வெளியூரில் இருந்து முரளிதரன் என்றால் அந்தப் பக்கம் உள்ளூரில் சீனிக்கட்டி, வெளியூரிலிருந்து நாகூர் பாபா என்று தலைவர்கள் துவேசத்தீயைத் தூண்டிவிடும் பணியைச் செய்கிறார்கள். இவர்கள் வளர்க்கிற தீயில் எரியத் தொடங்குகிற குடும்பங்கள் எத்தனை? குடும்பங்களுக்குள்ளே ஒற்றுமை

124

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/125&oldid=970636" இலிருந்து மீள்விக்கப்பட்டது