பக்கம்:முகவரிகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



    கடலூர் எல்லையில்
    கைது செய்யப்படுவது....

    'ஆழ்வார் பிரபந்தம் இருந்தால்
    ஏழுஜென்மம் கூட
    இந்தச் சிறையில் இருப்பேன்’
    என்று சொல்வது

    'சாகும் வயதில் போகும் காசிக்கு
    வாழும் வயதில் புறப்பட்டேன் நான்'
    'இசுலாமியர் கடையில்
    எனக்குப் பிடிக்கும் தேநீர்

    'எட்டப்பன் உறவு
    எட்டியானது'
    இப்படி இயம்புவது
    'மதுரை சேதுபதி பள்ளியில்
    தமிழாசிரியன் ஆனது
    வேகமாக விலகிப் போனது....

    'நன்றி கெட்ட நாடு இது
    என் தோழன் சிறை மீண்ட போது
    ஏனென்று கேட்கவில்லை
    ஏறெடுத்துப் பார்க்கவில்லை'
    என்று நெஞ்சில்
    ஒன்றிய சிதம்பரனார்க்காய்
    மெழுகாய் உருகியது....

    'மித்திரனும் நானும்
    இரட்டைப் பிறவிகள்'
    பத்திரிகை பிறந்த ஆண்டில்தான்
    பிறந்தேன் நான் எனப்
    பெருமைப்படுவது

138

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/139&oldid=970630" இலிருந்து மீள்விக்கப்பட்டது