பக்கம்:முகவரிகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
"இந்த வினாடிகளின் ஏக்கத்துக்காகவே
இத்தனை வருஷங்களைத்
தாண்டி வந்தேன்"

இந்த வரிகளை நம் பார்வை வருடும்போது

"Unless that affinity (Love) is created in a moment it will not be created in years oreven generations" என்கிற கிப்ரானிய இசையைக் கேட்க முடிகிறது.

வினாடியுகம் - முரண்பாடான சொற்களால் ஆனதலைப்பு. அபி இந்த முரண்பாடான சொற்களுக்கு எவ்வளவு அற்புதமாய் உறவை உண்டாக்கிவிட்டார் - ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு (Relativity theory) போல. அந்த அறிவியல் தத்துவத்தை விளக்குமாறு ஒருவன் கேட்ட போது ஐன்ஸ்டீன் வேடிக்கையாகச் சொன்னாராம்:

"ஒரு மணிநேரம் நீ அடுப்பின் மீது அமர்ந்திரு. நான் ஒரு மணிநேரம் என் அன்புக் காதலியுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். உனக்கு ஒரு யுகமாகத் தெரியும்; எனக்கோ அது ஒரு வினாடியாகத் தெரியும். இதுதான் அந்தத் தத்துவம்."

அப்படித்தான் வினாடிக்குள் யுகத்தை அடிக்கிக் காட்டுகிறார் அபி.


அபி காதலை மட்டும் காதலிக்கவில்லை. சொல்லப் போனால் இருட்டு, மெளனம், கண்ணீர், மரணம் இவற்றையே அளவுக்கும் அதிகமாகக் காதலிக்கிறார். அதனால்தானோ என்னவோ முன்பொருமுறை இவற்றையெல்லாம் லெபனான் தேசத்துத் தேவதாருக் காட்டிலே காதலித்து அடங்கிய அந்த கிப்ரானையும் காதலிக்கிறார்.

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/17&oldid=968470" இலிருந்து மீள்விக்கப்பட்டது