வெறும் சத்தத்தையே ஒரு கலையாகப் பயின்ற போர்பிரி மறையும்போது அவனுக்காக அழுது புலம்பிச் சத்தமிட ஒருவருமில்லை... பாவம்......
கொலோவா குடும்பத்தின் வீழ்ச்சிக்கு போர்பிரியே முழுப் பொறுப்பு ஏற்கவேண்டும் என்று சொல்வது நியாயமில்லை. அவனைப் பெற்றெடுத்த தாய் - அந்தக் குடும்பத் தாய் - அரினாவும் ஒரளவுக்குக் காரணம்தான். போர்பிரி வேரில் கோடாரி போட்டிருக்கிறான். அரினா விழுதுகளைக் கை வைத்திருக்கிறாள். வித்தியாசம் அவ்வளவுதான்.
தன் நெற்றி வியர்வையை நிலத்தில் சிந்தி ஒன்றைப் பத்தாய்ப் பெருக்கியதாய் ஆரம்பத்தில் அரினா எவ்வளவு பெருமைப்படுகிறாள். .
கணவனைப் பற்றியோ பிள்ளைகளைப் பற்றியோ அவள் கவலைப்படாமல் எஸ்டேட்டைப் பெரிதாக்குவதிலே கவனம் செலுத்துகிறாள். அது அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடத்தில் இடைவெளியையும் பெரிதாக்குகிறது என்பதைக் காணத் தவறுகிறாள். அன்பைத் தேடிய இளம் உள்ளங்களை அவள் ஆதரவோடு தழுவத் தவறுகிறாள்... கடைசியில் அவள் சீரழிவதைத் தன் கண்ணால் கண்டு கலங்குகிறாள்.
அரினா கொடுமைக்காரத் தாய் இல்லைதான். அதற்காக அவள் ஒரு நல்ல தாய் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? கார்க்கியும் ஒரு தாயைப் படைத்தார். அந்தத் தாய் எங்கே? இந்த அரினா எங்கே!
பெற்றெடுத்த மகனை மட்டும் நேசித்து வரும் ஒரு பாட்டாளி வர்க்கத் தாய், கொஞ்ச நாட்களில் அந்தப்
40