இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சொர்க்கம் என்று நினைத்துக் காதலில் கட்டுண்ட நெஞ்சுக்குக் கிடைக்கும் பரிசோ நரகம்... நரகம்... ஏகாந்த நரகம்...
சூரிய சந்திரனைப் போன்ற விழிகளையோ, தாமரை போன்ற முகத்தையோ மையிருட்டுப் போன்ற கூந்தலையோ கண்கள் பார்த்துப் பார்த்துப் பரவசமடையலாம்... அவற்றையெல்லாம் விட்டுவிட்டுக் கண்கள் காலமெல்லாம் காண விரும்பியதோ பாதங்களைத்தான்... பிரகாசமான அவள் பாத விளக்குகளைத்தான். அதற்கும் கூட வழியில்லையே...!
- 'கண்ணுக்குத் தெரிந்த உன்
- பாத விளக்குகள் அணைந்தபின்
- நீ விட்டுச்சென்ற சதங்கை ஒலிகள்
- மட்டுமே என் காதுகளுக்கு
- மிச்சம்'
அந்த அளவுக்குக் காதுகளுக்காவது ஏதோ கொஞ்சம்... 'மிச்சம்' என்னும் ஒரு சின்னஞ்சிறு சொல்லில் காடெல் லாம் விறகாக்கும் ஒரு பெருநெருப்பல்லவா பரவுகிறது.
காதல் சக்தி வாய்ந்தது. கை கூடினால், காற்றில் ஏறி விண்ணையும் சாடச் செய்யும்... இல்லையென்றால் விரக்தியின் விளிம்புக்கே ஒடச் செய்யும்.
- 'நான் ஒரு வழியைத்
- தேடிக் கொண்டிருக்கிறேன்
- என்னிடமிருந்து
- வெளியேறுகின்ற வழி'
என்று தப்பி ஒடும் தருணம் நாடச்செய்யும்.
44