உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முகவரிகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோசலிச சித்தாந்தத்தில் பிடிப்புள்ள எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் ஒரு முற்போக்குப் படையைத் திரட்ட வேண்டும்.

முப்பதுகளில் ஸ்பெயின் உள்நாட்டுப் போரில் பாசிஸ்டு பிராங்கோவை எதிர்த்து கிறிஸ்டபர் காடுவெல், மால்ரோ, நெருடா போன்றோர் அமைத்த சர்வதேசிய அணியைப்போல ஒரு அணியை எழுத்தாளர்கள் உருவாக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் சர்வதேச அணியை அமைக்கும் பணியில் இதோ தமிழ்நாடன் தயாராகிறார் - தன் ‘அம்மா அம்மா’ வுடன்.

பிறந்த நாட்டை மட்டுமல்லாமல் வையத்து நாடுகளையெல்லாம் பெற்ற தாயாகப் பாவிக்கிறார்.

ஆப்பிரிக்கா.......... அமெரிக்கா.......... இந்தியா.......... சோவியத்........... இந்த இளைய மைந்தனுக்குத்தான் எத்தனை 'அம்மா’க்கள். இன்னும் சில அம்மாக்கள் இவரது கவிதை மழலையைக் கேட்கக் காத்திருக்கிறார்கள்.

தமிழ்நாடன் எந்த அம்மாவையும் சின்னம்மாவாக்க விரும்பவில்லை.

இவர் முற்போக்கான பிள்ளை என்றாலும் முதலாளித்துவ, அம்மாவைக் கண்டு முகம் சுளிக்கவில்லை. 'சோசலிஸ்' அம்மாவைக் கண்டு பரவசமாகி நின்று விடவும் இல்லை.

51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/52&oldid=968512" இலிருந்து மீள்விக்கப்பட்டது