பக்கம்:முகவரிகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கால்நடை பராமரிப்புத் துறையினருக்குக்கூட இந்த அளவு தெரியுமோ என்னவோ... கி.ராவும், போத்தையாவும் மாடுகளைப் பற்றி எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார்கள். மாடுகளில் இத்தனை நிறங்களா, இத்தனை நோய்களா, இன்னின்னவை ஆகாதவையா...... அறிய அறிய நாம் ஆச்சரியப்படுகிறோம்.

அகராதிகளில் விளக்கமான சொற்றொடர்களில் பொருள் தரப்படுவதில்லை. பொருளை விளக்கும் மேற்கோள்கள் (illustrative idioms) கொடுக்கப் பெறுவதில்லை. இக்குறை இதில் இல்லை.

ஒவ்வொரு சொல்லுக்கும் தேவையானபோது விளக்கமோ ஒரு பழமொழியோ கதையோ தரப்படுகிறது. 'அத்தர் பானஸ்கோல்' என்பதற்குத் தந்திருக்கும் கதைபோல் "அத்திரிபாச்சா கொழுக்கட்டை” என்று ஒரு கதை முகவைப் பகுதியில் உண்டு.

கொட்டை நூற்றல் என்பதற்கு நூல் நூற்றல் என்ற பொருள் சொல்லி அதனோடு 'கப்பல் ஓடிக்கெட்ட குடியை கொட்டை நூத்துத்தேத்தப் போறாராக்கும்' என்ற பழமொழி இணைத்துக் காட்டப்படுகிறது. கப்பல்விட்ட பண்டை நாட்டவர் வழிவந்தவர் நாம் என்ற வரலாற்று உண்மையைப் பறைசாற்றும் பழமொழி அல்லவா இது? நாடகக் கலைஞன் கலை அரங்கில் மக்கள்தொகையையும் கூலிவேலை செய்பவன் சூரியன் விழும் வேளையையும் கணக்கிடுவதில் கருத்தாயிருப்பதை கிராம மக்கள் கேலி செய்து சொல்வதைப் படம்பிடித்துக் காட்டும் பழமொழி, 'கூத்தாடிக்குக் கீழே கண், கூலிக்காரனுக்கு மேலே கண்' என்பது. இத்தகைய பழமொழிகள் பல பிற்சேர்க்கையாகத் தரப்பட்டுள்ளன. பழமொழிகளைப் போலவே நல்ல பழங்கதைகளை கி.ரா. நடுநடுவே கூறுகிறார். 'வாயுள்ள

61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/62&oldid=968522" இலிருந்து மீள்விக்கப்பட்டது