இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எதற்குத் தெரியுமா?
தொடங்க வேண்டும்
துடிப்புடன் மீண்டும்
நூறு தடவை
ஆயிரம் தடவை
அதற்காகத் தான் .....
இது ஒரு கங்கைக் கரை கவிதை!
மனப்பாடம் செய்ததை ஒப்பிக்கும்போது இடையில் தடைப்பட்டால் ஆரம்பத்திலிருந்து மீண்டும் சொல்லும் பள்ளிச் சிறுவனைப்போல் உடற்பாடம் படிக்கும் காதலர்கள் இடையில் நிறுத்தி நிறுத்தி ஆரம்பத்திலிருந்து ஆரம்பிப்பார்கள். அப்போதுதான் இந்த உடல் சங்கீத அருவியாய் உருகி ஆனந்த ஆறாய்ப் பெருகிப் பரிபூரணக் கடலில் கலக்கும்.
இந்த ரகசியம் - நம் காவிரிக்கரைக் கலைஞ்ருக்கு வசந்தரூபனுக்குத் தெரிந்திருக்கிறது.
"உன்னை
எண்ணி எண்ணி
என் உடல்
இளைக்கவில்லை
இருகரம் வளைத்து
நீ என்னை
இறுக அணைக்கும்போது
உன் அணைப்புக்குள்
முழுவதும் அடங்க
வேண்டுமென்பதற்காகவே
அவ்விதம் இளைத்திருக்கிறேன்"
என்று தன் அடங்காத ஆசையைப் பிரகடனப்படுத்துகிறார்.
65