பக்கம்:முகவரிகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தலைமுறைகளின் கதை இங்கே முடிகிறது. கதை என்னவோ சாதாரணமானதுதான். ஆனால் நாவல்....?



ரணியல் செட்டிமார்களுக்கு ஒரு வரலாறு உண்டு. ஆதியில் அவர்களும் காவிரிப்பூம்பட்டினத்தில் (நகரத்தார் போல) இருந்தவர்கள்.

தங்கள் குலப்பெண் ஒருத்திமேல் ஒரு துலுக்க ராஜா அழகுக்காக ஆசைப்பட்ட விபரீதத்துக்கு அஞ்சிக் 'கோபல்ல கிராமத்து' நாயக்கமார் தெலுங்கு நாட்டை விட்டுப் புறப்பட்டதாக கி.ராஜநாராயணன் 'கோபல்ல கிராமத்தில்' குறிப்பிடுவதைப்போல், திரவியின் மூதாதை யரான செட்டியார் ஒருவரின் பெண்கள் இருவரை - கடுகு போன்ற பவளத்தில் நூல்கோத்த அறிவுக்காக அவர்கள் இருவரைக் - கட்டிக்கொள்ளக் காவிரிப்பூம்பட்டினத்து ராஜா ஒருவன் ஆசைப்பட்டதாகவும், அதனால் விளைந்த அவலத்தை ஒட்டி அங்கிருந்து செட்டிமார்கள் புறப்பட்ட தாகவும், அப்படிப் புறப்பட்டு வந்த செட்டிமார்கள் வெவ்வேறு இடங்களில் குடியேறியதாகவும், இரணியல் செட்டியார்களின் பூர்வீக வரலாற்றை உண்ணாமலை ஆச்சி வாயிலாகக் குறிப்பிடுகிறார் நீல. பத்மநாபன். பின் இரணியல், பளவடை, பத்மநாபபுரம், பறக்கை, மிடாலம், குளச்சல், திருவாங்கூர் ஆகிய ஏழு ஊர்களில் அவர்கள் குடியேறினர் என்றும் ஒடுப்பறை அம்மன் தான் அவர்கள் குலதெய்வம் என்றும் குறிப்பிடுகிறார்.

இரணியல் செட்டியார்களுடன் நாடாரும் நாயரும்கூடக் கலந்துறவாடுவது, தலைமுறைகளில் காணக்கிடக்கிறது. இரணியல் செட்டிமார் தமிழரேயாயினும் கேரளத்தை

77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/78&oldid=970643" இலிருந்து மீள்விக்கப்பட்டது