பக்கம்:முகவரிகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாங்கவில்லை. அவர்களைச் சுதந்திரமாகப் பேச வைத்திருக்கிறார்; உலவவிட்டிருக்கிறார்.

கதை சொல்லுகிற உண்ணாமலை ஆச்சியை அவள் போக்கில் விட்டுக் கதை சொல்ல வைத்திருக்கும் பாணி அலாதியானது. திரவிக்கு இரண்டுங்கெட்டான் பருவம் (Adoecent Age) என்று சொல்வார்களே அந்தப் பருவம். எல்லாப் பையன்களுக்கும் அந்த வயதில் 'ஏ கதை கேட்கும் ஆர்வம் இருக்கும். அதைப்போல திரவிக்கும் கூளாங்காணிப்பாட்டா அம்முக்குட்டியிடம் காதலைக் கொண்ட கதையைக் கேட்க ஆர்வம்.

'எளவெடுத்தவளுக்குத்தான் என்ன லச்சணம். தேவதாசி தோத்துப்போவா, அப்படி ஒரு மொக செளந்தரியம்... செக்கச் செவேண்ணு பளபளண்ணு ஒரு நெறம்... அம்மம்மா... தலைமுடிக்க நீளத்தைக் கேக்காண்டாம்... அண்ணைக்கு நிண்ண நிப்பை நெனச்சா எனக்கு இப்பம் கூட மேலெல்லாம் புல்லரிக்கு. சாமிக்கு முன்னே வந்து நிண்ணுட்டாண்ணா, சாமியைப் பார்த்துக் கும்பிடவா, இவளைப் பார்த்துக் கும்பிடவாவெண்ணு மனசுலே ஒரு பக்திப் பரவசமில்லா வந்துரு... ' என்று ஆச்சி அம்முக் குட்டியின் அழகை எவ்வளவு இயல்பாகவும் நேர்த்தி யாகவும், தீட்டிக் காட்டுகிறாள். ஆச்சி பெரிய மனுவி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவள் வருணனையில் எள்ளளவும் பெரிய மனுவித்தனம் இல்லை.

பெரும்பாலும் திரவியின் நினைவலைகளில் ஆடி அசைந்து கரைசேரும் ஒடமாய் இந்த நாவல் காட்சியளிக்கிறது. 'Flash Back' என்னும் உத்தி நவீன இலக்கியங்களில் பலரும் பயன்படுத்துவதுதான். நீல.பத்மநாபன் இதையும் கூடத் தனித்தன்மையோடு கையாளுவதில் வல்லவர்.

79

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முகவரிகள்.pdf/80&oldid=969451" இலிருந்து மீள்விக்கப்பட்டது