இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இப்படிச் சொல்லும்போது திரவிக்கே தனது வெற்றியில் நம்பிக்கையில்லாமல்தானே கீழைத் தெருவை விட்டு வெளியேறுகிறான் என்று கேட்கக்கூடும். உண்மையில் அவன் வெளியேற்றம் நிரந்தரமானதல்ல. தன் தேசம் சுதந்திரம் அடையவேண்டும் என்பதற்காக அந்நிய தேசத்தில் அஞ்ஞாதவாசம் செய்து - ஆயத்தம் செய்து திரும்பும் ஒரு புரட்சி இயக்கத் தலைவனைப்போல் அவன் எந்த நேரத்திலும் திரும்பலாம். தன் சமூகத்தில் புதிய ஞானத்தையும், சீலத்தையும் உருவாக்கலாம்.
இந்த நம்பிக்கையில், நெஞ்சம் நிமிர்ந்து நிற்க வைக்கும் தலைமுறைகள் ஒரு அசாதாரணமான நாவல்தான். பிரமிப்பை ஏற்படுத்துவதால் பேராசிரியர் ஜேசுதாசனுக்கு அது ஒரு அசலான நாவல். 'பிரமிப்பை' ஏற்படுத்துவதால் எனக்கோ அது இந்த நூற்றாண்டின் இதிகாசம்.
1968
82