பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

57


4. சூரிய கொடுமையும், கடுமையும்: (Sunheat)

சூரிய வெளிச்சம் உடலுக்கு நல்லது. அது விட்டமின் ‘டி’ யாக மாறி உதவுகிறது. விட்டமின்னால் கால்சியம் சத்து வளருகிறது. இளைஞர்களுக்கு வலிமையைச் சேர்த்து உதவுகிறது.

கருப்பாய் இருப்பவர்கள் மற்றும் மான் நிறமாக இருப்பவர்கள் சூரிய வெப்பத்தின் கடுமையால் அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை. ஏனென்றால் அவர்கள் உடலிலே இருக்கின்றன. மெலானின் என்ற சுரப்பி வெம்மையிலிருந்து காப்பாற்றி விடுகிறது.

ஆனால் அதிக வெள்ளை நிறத் தோல் உடையவர்கள் தான் சூரியனின் வெப்பத்தன்மையால் பாதிக்கப் படுகிறார்கள். சூரிய ஒளியின் கடுமையால் சூரிய காயம் ஆகி வலி தரும் தன்மையுடன் பெரிதும் பாதிக்கிறது. அதே சமயத்தில் காய்ச்சலையும் உண்டு பண்ணி கடுமையான நோய்க்கும் ஆளாக்கி விடுகிறது.

சூரிய வெப்பம் அதன் கொடுமையிலிருந்து தப்ப வேண்டுமானால் உடனே தன்னால் முடிந்தவரை நிழலுக்கு வந்து விட வேண்டும். தோல் பகுதியை முடியும் பாதுகாக்க வேண்டும். அதிகமான சூரிய புற ஊதாக் கதிர்களில் நிற்கும் போது தோல் புற்று நோய் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. வெள்ளைத்தோல் உள்ளவர்களைப் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கும். என்று ஆய்வறிஞர்கள் கூறுகின்றார்கள்.

சூரிய வெப்பக் கொடுமையிலிருந்து தப்ப வேண்டுமானால் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி