பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முக அழகைக் காப்பது எப்படி?

89


பாட்டை வெளிக்காட்டாமல் இருக்கமுடியும். இருக்க வேண்டும் என்பதை மேற்கூறிய கம்பனின் பாடல்கள் நமக்கு வழிகாட்டுகின்றன அல்லவா.

7. உணவு:

உணவு முறையிலும், உணவை உண்ணும் முறையிலும் நமது முன்னோர்கள் ஒரு சில வரன்முறைகளைப் பின்பற்றி வந்தார்கள். பெரும்பாலும் நம் தமிழகத்தில் “உணவே மருந்து. மருந்தே உணவு” என்று சொல்வார்கள். அதாவது நமது அன்றாட உணவில், சீரகம், சோம்பு, வெந்தயம், வெங்காயம், கடுகு, இஞ்சி, கேழ்வரகு, சோளம், பால் , தயிர், மோர், நெய், முந்திரி, திராட்சை, மஞ்சள், எலுமிச்சம்பழம் என்று பல்வேறு பொருட்களைப் பயன்படுத்துகிறோம். இந்தப் பொருள்கள் யாவும் மருத்துவ குணங்கள் உள்ளவைகளாகும்.

உணவே விருந்தாக இருப்பதோடு மட்டுமின்றி நம் நாட்டில்தான் மருந்தாகவும் இருந்துகொண்டு வருகிறது. நாம் உண்ணும் உணவு நமக்கு எப்படியெல்லாம் உதவுகிறது என்பதை முதலில் நாம் அறிந்து கொள்வோம்.

1. உணவு உடலுக்கு சக்தி அளிக்கிறது.

2. உணவு உடலை உருவாக்கவும், செல்களைப் புதுப்பிக்கவும் உதவுகிறது.

3. உள்ளுறுப்புக்களை இயல்பாக இயக்கி ஒழுங்குபடுத்துகிறது.