பக்கம்:முக அழகைக் காப்பது எப்படி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


B, B1, B2 என்ற வைட்டமின்கள் நாம் உண்ணும் கார்போஹைடிரேட் உணவுச் சக்திகளைக் கரைத்து, உடலுக்குள் கலந்துவிட உதவுகின்றன. நரம்புகளை உணர்வுடன் இயங்கச் செய்கின்றன.

C வைட்டமின் இரத்தம் உருவாவதற்கு முக்கியமாக உதவுகிறது. உடைந்துபோன திசுக்களைப் பழுது பார்த்துச் செப்பனிடவும், பற்கள், ஈறுகள், எலும்புகள், இரத்தக் குழாய்கள் உறுதி பெற்று உழைக்கவும் உதவுகிறது.

D வைட்டமின் பற்களுக்கும், எலும்புகளுக்கும் வலிமை தருகிறது. இது சூரிய ஒளியில் அதிகமாகக் கிடைக்கிறது.

வைட்டமின் E இரத்த ஓட்டத்தில் பிராணவாயுவை ஏந்திச் செல்லவும், வைட்டமின் K காயம் படும் போது அதிக இரத்தம் வெளியேறாமல் இரத்த உறைவை உண்டாக்கவும் உதவுகிறது.

இவை மட்டுமன்றி உலோகச் சத்துக்களும், நமது அன்றாட உணவில் இடம்பெற்றுத்தான் இருக்க வேண்டும் என்பதையும் நாம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

முகத்தில் தொடங்கி எங்கெங்கோ சென்று விட்டீர்களே என்று நீங்கள் நினைக்கலாம். முக எழிலுக்கு மட்டுமா நாம் உணவை உண்கிறோம். முழு உடம்பிற்கும்தானே உணவு உண்கிறோம்.