பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணியாள் வேண்டாம் எண்சீர் விருத்தம் 1 குடும்பவிளக் கெனும்நூ. லேக் கொணர்க என்று குயில்மொழியை என்துணையைப் பாடு கென்றேன் விடும்அத்தான் அவ்வெண்ணம்; பக்கத் துள்ளோர் விரும்பவிலை நாம்சிரித்துப் பேசும் பேச்சை; சுடும்படியாய்ச் சொல்கின்ருர் எதிர்த்த வீட்டார், துணைவரொடு சமமாகப் பழகல் கூடக் கொடுங்குணமென் றறைகின்ருர் தெருவி லுள்ளார்; குடும்பமென்ன இருட்சிறையா என்று சொன்னுள் 2 அடிபேதாய் ஊரார்கள் அப்ப டித்தான் ஆர்ப்பரிப்பர், அருகினில்வா! அவர்கட் காக மடிவதுவோ நமதின்பம்? அன்பும் சேர்ந்து மாள்வதுவோ ? இலக்கணமே மொழியைக் காக்கும் அடிவேராம் அதுபோல்கம் குடும்பத் திற்கும் அன்பொன்றே அடிப்படையாம், பண்பும் ஆகும் : கடிவாளம் அறுந்தவர்தம் பேச்சைக் கேட்டுக் கடிந்துரையேல் அன்பென்னும் இலக்க ணத்தை 79