பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தை இன்பம் எண்சீர் விருத்தம் 1 'பாய்ந்தோடும் அருவிமலைப் பக்க மெல்லாம் பல்வண்ணப் பூக்களிலே மென்மைத் தென்றல் தோய்ந்தோடி வந்துடலில் வருடும் போது சொல்லரிய இன்பமன்ருே அருமை அத்தான்! ஆய்ந்தெடுத்த யாழெடுத்துப் பாடு கின்றேன் அருகினிலே வாருமதோ பாரும் வானில் வாய்ந்தொளிரும் வெண்ணிலவு கூட்டும் இன்பம் ! வரம்புண்டோ?' என்றுரைத்தாள் துணைவி கல்லாள் 2 வெண்முகில்சூழ் மலைமுகடும் முகட்டி னின்று வீழ்ந்ததிரும் அருவிகளும் வண்ணப் பூவால் கண்கவரும் செடிகொடியும் கொடிகள் தாவிக் காட்டுகின்ற மரத்தொகையும் தென்றற் காவில் பண்சொல்லும் வண்டுகளும் மாலை வானில் படர்கின்ற செங்கிறமும் காதல் நங்காய் ! விண்மதியும் தருமின்பம் என்றன் பிள்ளை விளையாடும் காட்சிதரும் இன்பம் ஆமோ ? 88