பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிதைப் பெண்

எண்சீர் விருத்தம்

                   1

ணவில்லை உடையில்லை என்று வாட்டும்
ஓயாத கவலையில்லை; அந்த நாளில்
 மணல்நின்று கடல்கண்டேன் வானில் நிற்கும்
மதிகண்டேன் மலர்கண்டேன் வயல்கள் கண்டேன்
 தணல்கூரும் கதிர்கண்டேன் அங்கங் கெல்லாம்
தணியாத காதலுடன் கவிதை என்னும்
 அணங்கிருந்து புன்னகைத்துக் கடைக்கண் ணோக்கால்
 அருகழைப்பாள் பேசாமால் நானி ருப்பேன்
                     2

இதழ்விரித்துத் தென்றலெனப் பாட்டி சைப்பாள்
எழில்மயிலாய்த் தோகைவிரித் தாடி நிற்பாள்
 விதவிதமாய் நிறங்கொண்ட துகிலு டுத்து
விளையாடிச் செவ்வானில் காட்சி நல்கப்
 புதுமாலைப் பொழுதாகி நின்றி ருப்பாள்
பூமணத்தை வீசிடுவாள் மயங்கி ருட்டில்
 மதிமுகத்தைக் காட்டிடுவாள் எனைம யக்கி
வந்தணைப்பாள் இன்பத்தைக் கண்டு ணர்ந்தேன்

                    100