பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



6

என்றனர் அறத்தைக் காப்போர்;
இடிதலை வீழ்ந்த தென்ன
நின்றனன்; நிமிர்ந்து கண்ணில்
நீரினைச் சொரிந்தான்;'ஐயோ!'
என்றனன், 'ஏழை காசுக்
கெவ்விடம் செல்வேன்; என்னைக்
கொன்றிடல் நன்றும்; ஈசன்
கொடுத்ததிவ் விதியோ?' என்றான்

7


விதிவிதி என்று மக்கள்
வீணினில் மாய்ந்து சூழ்ச்சிச்
சதியினில் சிக்கி அந்தோ!
சாய்ந்திடும் லைமை கண்டும்
மதியொரு சிறிது மின்றி
மாற்றிட மனமு மின்றி
வதிவது நன்றோ? காட்டீர்!
வளமிகக் காண்போம் வாரீர்



100