பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குதிரை நினைத்தால்...?

                     எண்சீர் விருத்தம்

1

த்திரியால் அழகுசெய்த பிடர்நி மிர்த்துக்

கடிவாளம் கவ்விச்செல் புரவி மீது

மெத்தையமைத் தோரிளைஞன் அமர்ந்தி ருந்தான்

மெதுவாகச் செல்லமனம் ஒருப்ப டாமல்

வித்தைபயில் குதிரையென விரைய வேண்டி

விரித்துவிட்டான் கைச்சவுக்கை; அடியும் பட்டுப்

பத்துமடங் கதிகமாக வேகங் கொண்டு

பறந்ததுவே அப்புரவி , செல்லுங் காலே

2

" தூக்குவது போதாதோ ? இவனை நீண்ட

தொலைவுள்ள ஊருக்குச் சுமந்து வந்தேன்

தாக்குகிருன் கைச்சவுக்கால் கெடுவான் என்னை ,

தருகின்ற உணவுக்கா இந்தத் தொல்லை ?

போக்கற்ற உலகத்தில் குனிந்து தந்தால்

பொல்லாத மனிதரவர் எல்லாம் செய்வர்

காக்கின்ற உழைப்பாளி ஒட ஒடக்

கனவான்கள் விரட்டுகிறர் என்ற எண்ணம்

110