பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டண வாழ்வு எண்சீர் விருத்தம் I பட்டணத்தைப் பார்ப்பதற்கு நீண்ட நாளாய்ப் படிந்திருந்த ஆர்வங்தான் துாண்ட ஒர்நாள் துட்டெடுத்துப் புகைவண்டி ஏறிச் சென்றேன் சொல்லரிய காட்சிஎலாம் கண்டேன் கண்டேன் : விட்டெரிக்கும் விளக்குண்டு, 'விர்'ரென் ருேடும் விசைவண்டி பலவுண்டு, கப்ப லோடு கட்டுமரம் மிதந்தாடும் கடலும் உண்டு, கரடிபுலி காட்டுகிற நிலையம் உண்டு, - 2 மக்களுக்குச் சட்டத்தால் அறம்வ ழங்கும் மாமன்றம் உண்டு,கடற் கரையின் ஒரம் எக்களித்துத் திரிகின்ற பெண்கள் பள்ளி எழில்காட்டி கிற்பதுண்டு, உயர்நூல் சேர்ந்த தக்க ஒரு நூல்கிலேய இருப்பும் உண்டு, தனலால்கள் குழுவுண்டு, எழில்சேர் மாதர் தொக்கிருக்கும் மயிலாப்பூர் அல்லிக் கேணி தொடர்ந்திருக்கும் தியாகங்கர் அதுவுங்கண்டேன் 114