பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியேறென எழுவாய் பதினறுசீர்ச் சந்த விருத்தம் உழுவார்கரம் உயர்வாய்வர உலகோர்முயல் திருநாள் உனதாகிய திருநாடொரு தமிழ்நாடென வருநாள் குழுவார்கழை பிழிபாகுடன் முறியாமுனே அரிசி குழைவாயமு துணவாயதைக் குலமாதர்கள் தருநாள் எழுஞாயிறு புலர்காலையில் எழில்வான்மிசை வருமே இதுநாள்வரை துயராய்வரு பனிநாள் இனி அறுமே தொழுவாய்கதிர் தொழுவாய்கதிர் சுடரால்கலங் தரலால் சுடுவாய்பகை விடுவாய்மயல் துணிவாயெழு தமிழா 119