பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 ஆங்கிலமோ பிறமொழியோ பயின்று விட்டால் அன்னேமொழி பேசுதற்கு நானு கின்ற தீங்குடைய மனப்போக்கர் வாழும் நாட்டில் தென்படுமோ மொழியுணர்ச்சி ? ஆட்சி மன்றில் பாங்குடன் வீற் றிருக்குமொழி தமிழே என்று பகர்நாளில் மொழியுணர்ச்சி தானே தோன்றும் ; ஈங்கதற்கா என்செய்யப் போகின் றீர்ர்ே? இளைஞரினி விழித்தெழுந்தால் விடிவு தோன்றும் 4 ஆந்திரமும் கன்னடமும் சென்று வந்தேன் அங்கெல்லாம் மொழியுணர்ச்சி விளங்கக் கண்டேன் : மாந்தரெனத் திரிகின்ருேம் உணர்ச்சி யற்று வந்தவர்க்கும் போனவர்க்கும் பல்லேக் காட்டிச் சாந்துணையும் காக்கைபிடித் தலைந்து சென்று சாப்பாடே குறிக்கோளாய் மொழியைத் தாழ்த்தி வாழ்ந்திருக்க நினைக்கின்ருேம் படையெடுத்து வந்தமொழி வாழவழி செய்து தந்தோம் 5 பிறமொழியை வெறுக்கின்றேன் என்று சொல்லிப் பிழையாகக் கருதாதீர்! தமிழை யிங்கு மறுவறநன் குணர்ந்ததற்பின் பயில்க என்பேன் ; மனைவியைமற் ருெருவன்பால் அடகு வைத்துத் துறவறமேற் கொளலாமோ? தாய்த வித்துத் துடித்திருக்க அறஞ்செய்ய முனைதல் கன்ருே ? கறவையிடம் பால்கறந்து கன்றுக் கின்றிக் கதறி விழக் கடவுளென்று சிந்தல் கன்ருே? 122