பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 மறுமலர்ச்சி எனும்பேரால் தமிழின் பண்பை மாய்க்கின்ருேம்; மொழியிருக்கப் பாஷை என்போம், பெறுமகிழ்ச்சி சந்தோஷம் ஆகும் வேட்டி வேஷ்டி எனப் பெயர்மாறும் பதற்றம் என்ைேம் மறுமொழிபோல் பதஷ்டமெனக் குதிப்போம்: தண்ணிர் ஜலமாகும்; மறைக்காடு வேதா ரண்யப்’ பிறமொழியாய் மாறிவிடும்; மொழியு ணர்ச்சி பிழைத்திருக்க இடமுண்டோ? புதைத்து விட்டோம் 7 வணக்கமெனச் சொல்பவரைக் கட்சி சார்த்தி வாட்டுகிருேம்; “தாய்மொழியைப் புதைத்து விட்டுப் பிணக்கல்லில் வரவேற்பு நல்கல் வேண்டேன் பிறமொழியின் அடிமைகளே” என்று சொன்ன குணக்குன்ரும் நம்காந்தி எந்தக் கட்சி ? குறிக்கோளாய் வங்கமொழி வளர்ப்பான் வேண்டிப் பிணக்கின்றிப் பல நூல்கள் தந்த தாகூர் பேணினரே மொழியுணர்ச்சி எந்தக் கட்சி? 8 தமிழ்மொழியை உயர்தனிச்செம் மொழியாம் என்று தகுமுறையில் ஆராய்ந்து முடிவு சொன்ன தமிழ்மகனர் பரிதிமாற் கலைஞன் என்று தமிழ்மொழியிற் பெயர்கொண்டார் எந்தக் கட்சி? 'அமுதமெனத் தாய்மொழியைப் போற்றும் நாடு விழ்ந்ததில்லை, அதைத்துாற்றி வாழ்ந்த நாடும் தமதறிவிற் கண்டதில்லை” என்று ரைத்த தமிழாசான் முத்துசிவன் எந்தக் கட்சி? 123