பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 மணவினையில் தமிழுண்டா? பயின்ருர் தம்முள் வாய்ப்பேச்சில் தமிழுண்டா? மாண்ட பின்னர் பிணவினையில் தமிழுண்டா? ஆவ ணத்தில் பிழையோடு தமிழுண்டு; கோவில் சென்ருல் கணகணவென் ருெலியுண்டு; தமிழைக் கேட்கக் கடவுளரும் கூசிடுவர்; அந்தோ அந்தோ! அணுவளவும் மொழியுணர்ச்சி இல்லா நாட்டில் ஆத்திகர்ே இறையுணர்ச்சி வளர்வ தெங்கே? 10 உடுக்கின்ருர் உண்கின்ருர் உயர்வுங் கொள்வார் ஒப்பற்ற தமிழ்மொழியால், நன்றி இன்றிக் கெடுக்கின்ருர் அதன்வளர்ச்சி நேராய்ச் சில்லோர்; கேண்மைகொண்டு வளர்த்திடுவோம் என்று சில்லோர் கொடுக்கின்ருர் நஞ்சுதனேக் கூசா திங்தக் கொடுமைகளை நீக்கிடவே ஆவி தானும் விடுக்கின்ருேம் தாய்மொழிக்கே என்று சொல்லி வீறுற்று நிமிர்ந்தெழுவிர் தமிழ்நாட் டீரே ! 11 தமிழ்காக்கப் போர்செய்ய உணர்வு வேண்டும் தமிழ்கொன்று வாழ்கின்ற கயமை வேண்டாம் தமிழ்காக்கப் போர்செய்யப் புலிகள் வேண்டும் தடுமாறி ஓடிவிடும் எலிகள் வேண்டாம் தமிழ்காக்கப் போர்செய்யச் சிங்கம் வேண்டும் தாளமிடும் ஒலமிடும் நரிகள் வேண்டாம் தமிழ்காக்கப் போர்செய்ய மானம் வேண்டும் தாலமுத்து நடராசன் துணிவு வேண்டும் 124