பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 சிடச் செய்ய முடியும் என்று கூறிக் கவிஞனின் ஆற்றலை விளக்குகிருர். கைவல்ல ஒவியன் சில வரை கோடுகளை இழுத்து, உயிருள்ள ஒவியத்தைப் படைத்து விடுவது போன்றது. இது. நாற்று நடும் பெண்களைச் சுழன்ருடும் குழல்மாதர்' என்னும்போது அவர்களது இயக்கம் உணர்த்தப்படுகிறது. 'கால் இழுத்துத் தவழ்கின்ற குழந்தை' என்றதும் நம் முன்னர்த் தவழ்ந்து வரும் குழந்தையையே நாம் காண் கின்ருேம். விரிகொம்பு மான்' என்பது ஒர் ஒவியம். 'தும்பி எழுந்து ஆர்க்கின்ற முல்லை என்பது ஒர் ஒளிப் படம். மண்தின்ருல் தீமை என அறியாப்பிள்ளை' குழந்தை யின் வயதையும் இயல்பையும் காட்டும் அளவு கருவி. "சினந்துரைக்க நீர் சிந்தும் பசித்த கண்கள்' என்பது வறுமைக் காவியம். ஆம், பணம் உடையவர்கள் சினங் துரைப்பதும் பசித்தவர்கள் அழுவதும்தானே உலகத்தின் கடைச்சரக்கு காவியங்களின் கைச்சரக்கு 1 வயிற்றிலே பொங்கி எழுந்த பசி, கண்களிலே வெளிப்படுவதைப் பார்த்துப் பசித்த கண்கள் என்று கூறுகிரு.ர். இரட்டுற மொழிதல் என்னும் சிலேடை நயத்தில் இக் கவிஞர் மிகவும் வல்லவர். இவர், கவிதைகளில் பெரும்பாலானவற்றில் உட்பொருள் வைத்தே பாடியுள் ளார். உண்மையிலேயே உய்த்துணரும் வகையிலே படைப்பதுதான் கவிதையின் டிேத்த வாழ்வுக்கு உதவும். _ - -

  • In a single line, sometimes in a single epithet the Poet can flash upon our imagination a Picture that shall seem filled with passionate emotion—C. T. WINCHESTER.