பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 'படைத்தோன் வாழ்க’ என்ற தலைப்பை எடுத்துக் கொள்ளுங்கள், மைசூரின் பிருந்தாவன எழிலைப் பற்றிய கவிதை இது. இத்தகைய இயற்கை எழிலைப் படைத்த கடவுளே வாழ்த்துகிருர் கவிஞர் என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள்; அன்று! நெற்றி வியர்வை சிந்தி, நெடு நாளாய்ப் பாடுபட்டுச் சிறிது சிறிதாகப் பேரெழிலைச் சேர்த்துத் தந்த தொழிலாளர்கள் அல்லவா அதைப் படைத்தவர்கள் ! அவர்களே வாழ்த்துகிருர். படைத்த கடவுள் கேரே வந்து பயன் தந்ததாகப் புராணக் கதைகளிலும் இல்லை. அவதாரங்கள் எடுத்து வந்து அவர் உதவுவதாகவே அவைகள் கூறும். படைத்த கடவுள் தொழிலாளர் வடிவிலே வந்து இம் மாபெரும் கனவுலகப் பூங்காவை நனவாக்கித் தந்தார் என நம்பினல் நாம் தொழிலாளர்கட்கு நன்றியும் கடவுளுக்கு வணக் மும் செலுத்தியவர்களாகிருேம். அதை விடுத்து, கடவுளை மட்டுமே போற்றுவோம் என்று கூறித் தொழிலாளர்களை மறப்பவர்கள், கடவுள் எந்த உருவத்திலே வந்து உதவி ேைரா அதனையே விலக்கித் தள்ளுகிறவர்கள் ஆவார்கள். இதல்ை அவர்கள் கடவுளே விட்டே நெடுந்துாரம் விலகிச் சென்று விடுகிருர்கள். 'தமிழ் வழங்காக் கோவிலுள்ளே தலையைக் காட் டேன்' என்கிருர் கவிஞர். ஆம், மன ஈடுபாட்டுடன் வணங்க முடியாத நிலையைத்தான் இன்றையக் கோயில் களில் காண்கிருேம். அமைதியான சூழ்நிலையில் தன் குற்றங் குறைகளை எடுத்துச் சொல்லி, தானே மனம் விட்டுப் பாடி, கடவுளே வணங்க வாய்ப்புத் தர வேண் டும். அன்பனுக்கும் ஆண்டவனுக்கும் நேரடித் தொடர்பு