பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19



ஏற்பட வழி வேண்டும். எனவே எந்த நோக்கங் கருதி, இக் கோயில்கள் வானுற எழுப்பப் பட்டனவோ அந்த நோக்கத்திற்கு அவை இன்று பயன்படவில்லை என்பதைத் தான் இந்த அடிகள் நினைப்பூட்டுகின்றன. கவிஞன் எதைச் சொன்னாலும் அழகுணர்ச்சி பொருந்த, வியப்புணர்ச்சி படியத் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். 'நன்றாகச் சொல்லியுள்ளானா என்பது தான் கேள்வி. எதைச் சொன்னான் என்பதன்று. கவிதையைப் பொறுத்த வரை 'என்ன ?' என்ற கேள்வி கருத் தற்றது. 'எப்படி ?' என்பது தான் சிறப்புத் தருவது" என்று பேராசிரியர் பிராட்லி கூறுகிறார். தோற்று விட் டேன் என்ற தலைப்பிலே வரும் கவிதைகளைப் பாருங்கள் எல்லோரும் பாடும் குழந்தையைத்தான் இவரும் பாடு கிறார்.

'போர்க்களத்தில் எதிர்நிற்க எவருங் காணேன்
பூரித்தேன் வீரத்தாற் செருக்குங் கொண்டேன்
தார்க் கழுத்தில் வன்புயத்தில் முகத்தில் எங்கும்
தளிரடியால் எனைமிதித்தாய் தோற்றுவிட்டேன்'

போரில் புறங்கண்டேன்; பொன்னழகி என்னை வென்றாள் என்று காதல் பூரிப்பிலே காளே கூறியதாகக் கவிஞர்கள் பாடுவதுண்டு. இவரோ போரிலே வீரத்தைக் காட்டிய என் புயத்திலும் முகத்திலும் தளிர்போன்ற மெல்லிய அடிகளால் மிதித்து, என்னைத் தோற்கவைத்து விட்டாயே என்று குழந்தையைப் பார்த்துக் கூறுகிறார். கவிஞர் எப்பொழுதுமே குழந்தைகட்குத் தோற்றுவிடும் இயல்புடையவர்தான். அவர் மட்டுமென்ன! மனித சமு


✽It matters not what a Poet says,so long as he says the thing well. The 'what' is poetically indifferent; it is the 'how' that counts. -A.C.Bradley.