பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பன் குரல்

வெண்கலிப்பா

னவோட துயில்கவ்வக் கண்மூடி நானிருந்தேன்
புனலோடி வளஞ்சேர்க்கும் பொன்னித் திருநாட்டில்

வருவிருந்து பார்த்திருக்கும் வாழ்வுடையார் சேர்ந்துறையும் திருவழுந்துார் எனப்புகலும் சிற்றுார் தனையடைந்தேன்

கம்பன் இருக்குமிடம் காட்டிடுவீர்! எனவினவ
அம்பொன் மணிமாடம் ஆய்கின்ற கலைக்கூடம்

மிகவுடைய, பொருள் அள்ளி மேலோர்க்குத் தருகின்ற
தகவுடைய, வள்ளன்மைத் தனவணிகர் நாடேகின்

காணலாம் எனப்புகன்றார் கண்டவர்கள் ; வங்ததிங்கே
வீணதுவோ எனக்கலங்கி விரைந்தேன் மிகவிரைந்தேன்

நாட்டரசன் கோட்டை நகரடைந்தேன் கம்பன்
கூட்டை மறைத்திருக்கும் கோவிலினை நான்கண்டேன்

வணங்கிமுகம் மேல்நிமிர்த்தேன் வானக் குடுமிதொடும் மணங்கமழும் வெண்புகையின் மண்டலத்துள் ஓருருவம்

வந்துநின்று நின் விருப்பம் வாய்விட்டுக் கூறெனலும் நொந்திருக்கும்என் மனத்துள் நுழைந்ததுகாண்பெருமகிழ்வு

176