பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பம் ஒரு காவியம் எண்சீர் விருத்தம் 1 அன்பினுக்கோர் எல்லை.எனும் அன்ன தந்தை அறவுரைகள் எடுத்துரைக்கும் ஏடாம், இல்லாள் இன்பமெனும் சுவையுணர்த்தும் ஏடாம் உள்ளம் ஈர்க்கின்ற மழலைமொழிப் பிள்ளை நெஞ்சத் துன்பறுக்கும் இசைச்சுரங்கம், உடன்பி றந்த துணைவர்களோ தோள்வலிமை காட்டும் ஏ. டாம், வன்புரைக்கும் காத்தியவள் அவலம் என்னும் சுவையினேயே வடிகட்டி உணர்த்தும் ஏடாம் 2 ஆதலினல் குடும்பமது சுவையால் நெஞ்சை அள்ளுமொரு காவியமென் றறைதல் சாலும், மோதலிலாக் குடும்பத்தில் பகைக்கு ணத்தை மூட்டிவிடும் ஊராரோ காவி யத்தைத் தீதுறவே அரித்தொழிக்கும் அந்துப் பூச்சி செல்கரையான் இவைபோல்வர், அவர்கள் பேச்சைக் காதுமடுத் திடவேண்டா, ஒதுக்கிவிட்டுக் காவியத்தைக் காத்திடுக வாழ்வீர் நன்றே! 192