பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 கார்வரவும் நான்வருவேன் என்ருர் இன்னும் காணவில்லே மழையேபோ என்ருெ ருத்தி போர்புரிவாள்; காதலர்என் னருகில் உள்ளார் பொழிகமழை பொழிகளன. இன்பம் பொங்க மார்பகங்கள் பூரிப்பாள் மற்ருெ ருத்தி, மழைபெய்யின் கல்விளேச்சல் காண்பேன் என்பான் ஏர்புரிவோன்; மற்ருெருவன் இன்று பெய்தால் எள்முதிர்ந்து கிற்பதெலாம் பாழே என்பான் 4 தண்முகிலே ெேபாழிந்தாற் சோறே யில்லே தயைசெய்வாய் என்றுழைப்பால் உண்போன் சொல்வான்; கண்மறையப் போர்வைக்குள் சுகமே காண்போன் களித்திருப்பான், இரப்பாளன் வசவு சொல்வான்; விண்மழைக்கு வரவுரைத்து மயில்கள் ஆடும்; வேருெருபாற் குயில்வருங்தி வாய டங்கும்; பண்ணிசைக்கும் கவிஞனுடன் காள மேகம் பாரிலெவர் உரைகேட்டு கடத்தல் ஆகும்? %. 198