பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்பு காதற் சிலை பழமைச் சிறப்பு வாய்ந்த இலக்கிய வளங்கொண் பாரசிகம், என்றென்றும் நிலைத்து வாழும் உயிர்க் கவிஞர் பலரைத் தந்துள்ளது. அக்கவிகளுள் நிசாமி என்பவரும் ஒருவர். அவர் படைத்த காவியங்கள் உணர்ச்சி வேகம் மிக்கவை. கோசுரு சிரீன் என்னும் பெருங்காப்பியம் அவர்தம் படைப்புக்களுள் ஒன்ருகும். அக் காவியக் கதையைத் தழுவி எழுதப்பட்டது இந்நெடும் பாட்டு. சுதமதி இஃது ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்ருகிய மணி மேகலை தரும் செய்தியாகும். மணிமேகலையின் தோழி சுதமதி. இவள் வரலாறு மலர்வனம்புக்க காதையில் 29 முதல் 41 வரையிலுள்ள வரிகளில் காணப்படுகிறது. அதனை விரிவு படுத்தி, வேத நெறியால் சமண நெறிக்கும் புத்த நெறிக்கும் நேர்ந்த விளைவுகளையும் கூறுகிறது இந் தப் பாட்டு. அழகின் சிரிப்பு கோவையில் 1950 மே 27, 28 தேதிகளில் கவியரசர் பாரதிதாசனர் தலைமையில் முத்தமிழ் வளர்ச்சி மா நாடு நடைபெற்றது o கவியரங்கமும் நிகழ்ந்தது : அவ்வரங்கில் முதற் பரிசில் பெற்றது இக்கவிதை. 2.13