பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“மாதுடல் அமைப்பின் மாண்புகள் யாவும் சிற்பச் செந்நூல் செப்பும் இலக்கணச் சொற்படி கண்டேன் சொக்கினேன், இவளுரு 95 அற்புதப் படைப்பாய் அமையும் எனினும் விழியில் வழியும் ஒளியும் அருளும் பிழிதேன் பொழியும் மொழிபுகல் வாயின் இதழில் தவழும் இனிய மூரலும் புதுமைச் சிலையில் புகுத்திக் காட்ட 100 என்கைச் சிற்றுளி வல்லதோ எனங்ான் - உன்னிப் பார்த்தேன் உயிர்த்ததென் நெஞ்”சென: இருவர் நெஞ்சம் சிலையாய் கின்றவள் சிரித்தனள், வாயில் கிலேயாய் கிற்கும் நிரல்படு முத்தின் ஒளிபட அவன்முகம் களியால் மலர்ந்த(து) IO5 அளிகிறை நெஞ்சை அவன்பால் வைத்துத் தளிரடி பெயர்த்துத் தையல் கடந்தனள், பேதையின் பின்செலும் பேதுறும் மனத்தைத் தீதிலன் தடுத்துத் திருப்பினன் அவள் சிலை * - படைத்திட வேண்டும் பணியுள ததனுல்; 110 உடைத்தொரு கல்லில் உளியை நாட்டினன் தளிரடிச் சிலம்பொலி உளியடிக் கெழுமொலி குளிர்மலைச் சாரலில் குலவி எதிர்ந்தன. சிலம்பொலி தாழ்ந்தது சிற்றுளி ஒலித்த(து) முடிந்தது படிமம் உண்ணுன் உறங்கான் உடல்நலம் பேணுன் 115 கண்வழி புகுந்து கருத்திற் கலந்தவள் வண்ண உருவம் வடிப்பதே தொழிலாய் ஒவ்வோ ருறுப்பும் உன்னி கோக்கிச் 5