பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- செவ்வனே முடித்தனன் செப்பிய எழுநாள் முடிந்தது சிலையும் முடிந்தது கெஞ்சிற் படிந்த உருவின் படிமம் கண்டனன்; காதல் மடவார் கடைக்கண் பணித்தால் ஈதொரு பணியோ? ஏழ்சிலை முடிப்பர் ! காதல் வேகம் கடிதே கடிதே !

வார்ப்புரு:Xxx larger?

மன்னன் மகளாம் மயிலியும் வந்தனள் நன்னர்ச் சமைத்த கயத்தகு படிமம் கண்டனள் வியப்புக் கொண்டனள் மிகவே ; 'ஒண்டொடி என்போல் உளதோ இவ்வுரு ? விண்டிடு மெய்' என வினவினள் தோழியை; மயிலியைச் சிலையின் மருங்கினில் நிறுத்திப் பயிலியற் சாயல் பார்த்தனள், விம்மி 'எது சிலை எது நீ எனக்காண் பரிது! புருவச் சிலையில் பூத்துள வியர்வால் உருவச் சிலேஎது உன்னுடல் எதுவென உணர வல்லேன்; ஒப்பிலே இவற்கே ! இணர்மலர்க் கோதையின் இதழின் சிரிப்பும் இன்னருள் விழியும் எப்படிப் படைத்தனே ? கற்பனை மிகுத்திடும் சிற்பக் கலைஞ ! நிற்புகழ்ந் தேத்த முற்படும் எனக்கு நாவும் ஒன்றே நானென் செய்கேன்?' வார்ப்புரு:Xxx larger "பலபடப் புகழும் பாவாய் ! என்றன் கலைமுறைத் திறனைக் காட்டிலேன்; நெஞ்சில் வாழும் வடிவின் வார்ப்படம் இவ்வுரு ஊழால் அமைத்திடும் உருவினில் ஒருகுறை