பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உளதிவள் நெஞ்சை உளியாற் படைத்த சிலையிற் பொருந்தச் செய்திலேன்' என்றனன்; நெஞ்சம் கலந்தன 'நெஞ்சை நும்பால் நிறுத்திச் சென்றேன் வஞ்சம் செய்தீர்' என்றனள் வஞ்சி; தொலைவில் இருக்கும் சிலையைக் காணத் தோழி அகன்றனள், தூயகற் கலைஞன் 'வாழி நெஞ்சே வாழிய மயிலி என்றன் நெஞ்சும் உன்றன் நெஞ்சும் ஒன்றிய படியால் எடுத்ததைச் சிலையில் வைத்திட மறந்தேன் மைத்தடங் கண்ணி ! தைத்திரு நாளில் தாம்கலந் தனவே மன்னன் மகள் மயலுறும் என்பால் அன்புடன் கடைக்கண் அருளுதி யோ? என, காதல் மன்னன் "மாண்புயர் கலையில் மணிமுடி யரசர் ! ஏனுமக் கையம்? என்மன வுலகில்ர்ே ஆளும் மன்னர் ! அன்பரீர் நும்மை நாளும் நினைந்தே நலிவுறு கின்றேன் என்றலும் தோழி இடையில் வந்து நின்றனள் பின்னர் நீங்கினர் இருவரும்; ஆடினன் பாடினன் அருவி நீரில் ஆடினன் ஒடினன் ஆண்டுள மலர்களைச் சாடினன் அச்சிலை சார்ந்துதன் மெய்யால் மூடினன் காதலில் மூழ்கினன் சிற்பி: வேந்தனும் சிலையும் வேட்டம் போகிய வெள்வேல் வேந்தன் கோட்டம் காணிய குறுகினன் ஆங்கண் 7 145 150 155 160 165