பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'குறிஞ்சி காட்டின் கோமகன் வந்தான் 170 அருந்திறல் அரசர்க் கரசன் வந்தான்' என்றிரு காவலர் இசைத்திட, எழுந்து சென்று வணங்கிச் சிற்பக் கலைஞன் 'குறிஞ்சி நாட! நின் கொற்றம் வாழி ! செறிந்தால் லறஞ்சேர் செங்கோல் வாழி ! I?5 தெரிந்த வகையால் செய்துளேன். சிற்பம் அறிந்திட வந்துளிர் அடியனேன் வணக்கம், என்று கூறி இயற்றிய சிலேஎலாம் நன்று காட்டிட, நாடாள் வேந்தன் அழகோ வியமாய் ஆண்டுள சிலேயை 18O விழியால் பருகினன் வியந்தனன் அவன்திறம் நின்றுள சிலையெலாம் கிரல்பட நோக்குவோன் ஒன்றிய ஒருசிலை உற்று நோக்கினன் மயிலியின் சிலையில் மயங்கி அதனை விலையால் பெறுவான் விழைந்தனன்; சிற்பக் 185 கலைஞன் அதன்கிலே கழறினன் விரிவாய்; ஆசை அரும்பியது வடிவேல் மன்னன் மகளெனக் கேட்டலும் கொடியிடை யிவள்போல் குவலயம் யாங்கனும் வடிவுடை யழகி வாழ்ந்திடல் காண்கிலேன் என்னடி வணங்கித் திறைகொடுத் திருக்கும் 190 மன்னவன் இவற்கோர் மனங்கவர் மகளுளாள் என்ப தறிந்திலேன் இன்றே தெரிந்துளேன் பின்பவட் காண்பேன் பேதையை மணப்பேன் என்று மனத்துள் எண்ணினன் சென்ருன். துரது தோற்றது சென்ற குறிஞ்சியான் செய்தி எழுதி 195 வடிவேல் மன்னனின் மகட்கொடை வேண்டிக் Fr"i