பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதிற் செல்லும் காவலற் போக்கினன் : முடங்கல் கண்ட முழுமதி முகத்தாள் தடங்கல் சொல்லித் தானெரு சிற்பிக் குரியள் என்பதை உணர்த்துக என்றனள், சீற்றம் எழுந்தது சிறியவள் விடுத்த செய்தியைக் கேட்டுச் சிறி எழுந்தனன், சிற்றர சன்மகள் மீறிய உரைசொல மேவிடும் செருக்கைக் கூரிய மதிகொடு கொட்டம் அடக்குவேன் ’ திப்பொறி சிதறச் சினந்துரை கூறிக் "கூப்பிடு அந்தக் கொடுஞ்செயற் சிற்பியை’ என்றலும் ஏவலர் ஏகினர் கொணர்ந்தார்; சூழ்ச்சி சுழன்றது கின்றிடும் சிற்பியை நெருங்கினன் குறுகிக் 'கலேவலோய் ! கின்றன் காதற் குறிப்பின் கிலேயெலாம் அறிகுவுன் ெேயாரு குடிமகன் அரசியை மணத்தல் அடுக்குமோ ? அதனல் கருமலேக் குறிச்சிக் காவலன் ஆக்கிடக் கருதி உனையிவண் கடிதின் அழைத்தேன் என்மொழி கேட்க இசைகுவை யாயின் மன்மகள் கினக்கு மனமகள் ஆவள் உன்கலைத் திறனே உலகமும் ஏத்தும்' என்றனன் வேந்தன், இசைந்தனன் சிற்பி; "குன்றடர் மலையைக் குடைந்தொரு கால்வாய் சென்றிடப் படைத்துச் சிற்பத் திறமெலாம் காட்டி அதனிரு கரையிலும் அமைத்திடல் வேட்டனன் யானே விரைவினில் முடிப்பின் வேட்டவள் தன்னை வியன்மணம் கொள்வாய் 9 200 205 210 215 220